Home > கலை > தரிசனங்களின் நீட்சி

தரிசனங்களின் நீட்சி


காற்றில் வாழ்வைப் போல்
வினோத நடனங்கள் புரியும்
இலைகளைப் பார்த்திருக்கிறேன்.
ஒவ்வொரு முறையும்
இலையைப் பிடிக்கும்போது
நடனம் மட்டும் எங்கோ
ஒளிந்து கொள்கிறது

தேவதச்சன்

இந்த கவிதையை , ” வாழ்வை அறிந்துகொள்ள  , அதன் புறக்காரணிகளை பிடிக்கும்போது , வாழ்க்கை நழுவி விடுகிறது ” என்பது போல புரிந்து கொள்கிறேன் .  எந்த தரிசனத்தையும் புறவயமாக மட்டும் அறிந்து அதனை தரிசிக்க முடியாது. அது நழுவிச்சென்று விடும். ஆனாலும் நமது மானுட முயற்சி தளர்வதில்லை .

நடராஜ தத்துவத்தை உலகம் அவதானித்துக்கொண்டு தான் வருகிறது. ” Angels and  Demons அல்லது Davinci Code  ” படத்தில் கூட லாங்க்டனின் அறையில் நடராஜர் ஓவியம் கொண்ட புத்தகம் இருக்கும். சிறு வயதில் கதைகளை அப்படியே நம்பி சிவனின் இருபத்தி ஐந்து மாகேஸ்வர மூர்த்தங்களில் ஒன்றாக மட்டுமே நடராஜரை அறிந்திருந்தேன்.

மெக்கானிகல் எஞ்சினியரிங் படிக்கும் போது மெட்டலர்ஜி எடுத்த பிரசன்ன வெங்கடேசன் சார் நமது பாரம்பரிய உலோகவியல் அறிவைப்பற்றி பேசும் போது நடராஜரின் ஒவ்வொரு அங்கமும் ஆடுவதையும் அதை உலோகத்தில் வடித்த சிற்பியின் திறனையும் வியந்தார்.

பிரபஞ்சமே நிலையாக இல்லாமல் ஆடிக்கொண்டு தான் இருக்கிறது , ஒரு அணு கூட அசையாமல் இல்லை என்பதை தரிசித்த  நமது முன்னோர்களில் எவரோ , அவர் பெற்ற தரிசனத்தை பௌதீகமாக நடராஜர் உருவத்தின் மூலம் அமைத்திருக்கக்கூடும் .

அந்த வகையில் நமது ரஞ்சித்தின் இந்த ஓவியத்தை மானுட ஞானத்தை , தரிசனங்களின் மீது போட்டுப்பார்ப்பதின் நீட்சியாகவே காண்கிறேன் . குறிப்பாக கன சதுரத்தைச்சுற்றிய பாம்பின் தலைக்கு மேல் பறக்கும் தட்டான் பூச்சியை பார்க்கும் போதே , அசைவு தான் நினைவுக்கு வருகிறது இல்லையா ? .

Categories: கலை
  1. April 5, 2012 at 11:54 AM

    தேவதச்சனின் கவிதை அற்புதம். உன் தரப்பு பார்வையும் மிக அருமை. சிவன் ஓவியத்தின் சாரம் அசைவு/இயக்கம் என்ற உனது புரிதல் மிகச் சரியானது. நமது படைப்பு சரியாக புரிந்து கொள்ளப்படும் போது கிடைக்கும் ஆனந்தத்திற்கு அளவில்லை. நமக்கிடையேயான இத்தகைய சிந்தனை பரிமாற்றம் மகிழ்ச்சியளிக்கிறது.

    மிகச் சுவாரஸ்யமாக செல்கிறது உனது பதிவுகள். தொடரட்டும். வாழ்த்துக்கள்.

  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

சித்திரவீதிக்காரன்

மதுரைக்கும் தமிழுக்கும் நேர்ந்துவிடப்பட்டவர்களுள் ஒருவன்

வண்ணதாசன்

வண்ணதாசன் எனும் கல்யாண்ஜி, புதிதாக எழுத வருபவர்கள்..வண்ணதாசனை படிக்க வேண்டும்.. (சுஜாதா)

நாஞ்சில்நாடன்

நாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.

சொல் புதிது!

கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவட்டும்!

மனம் போன போக்கில்

N. Chokkan (என். சொக்கன்)

%d bloggers like this: