Home > விமர்சனம் > வரலாறு போற்றுதும்! வரலாறு போற்றுதும்!

வரலாறு போற்றுதும்! வரலாறு போற்றுதும்!

காவல் கோட்டம் சு. வெங்கடேசன் அவர்களின் நேர்காணல் ஒன்றை வாசித்தேன். நமது வரலாறு எப்படி வாய்மொழியாகவே அடுத்ததடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லப்பட்டது என்பதை உணர்ச்சிப்பூர்வமாகச் சொல்லியிருந்தார். வெள்ளையருடன் போரிட்ட கதைகளை அந்தப்பெரிய மனிதர் எப்படி சொல்கிறாரோ அப்படியே ஆங்கிலேயக்குறிப்புகளும் சொல்கின்றன என்கிறார். கீழப்பாவூர் அரசு நூலகத்தில் அச்சுப்பத்திரிக்கையில் படித்தேன் , இல்லாவிட்டால் லிங்க் கொடுத்திருப்பேன்.

வாய்மொழி வரலாற்றில் உள்ள குறைகள் யாவரும் அறிந்ததே. இந்தக்காலத்தில் இத்தனை வசதிகள் இருந்தும் ,எழுத்தில் வரும் செய்திகளே மாறும்போது வாய்மொழி எல்லாம் எந்த மூலைக்கு ?

எதற்கு இதையெல்லாம் சொல்கிறேன் என்று நீங்கள் கேட்டால் , இந்தப்பதிவை பார்த்துவிட்டு ஏற்பட்ட மனக்குமுறலால் என்பேன். நம்முடைய ஆட்களின் வீரத்தை வெளிக்காட்டும் விதமாக இந்தக்கல்லறைகளை நீங்கள் பார்க்கவில்லை என்றாலும் கூடப் பரவாயில்லை . அரசு வைத்திருக்கும் அறிவிப்பு பலகை என்ன பாவம் செய்தது ஐயா ? அதைப்போய் இப்படி உடைத்து போட என்ன அவசியம் நேர்ந்தது ?

எங்கள் நீதிமாணிக்கம் சார் ஒருமுறை கயத்தாறு அருகே ஒரு விமான ஓடுதளம்  ஒன்றை பார்த்துவிட்டு வந்ததை சொன்னார்.  இரண்டாம் உலகப்போரின் போது பயன்படலாம் என்பதற்காக கட்டப்பட்டதாம் . இன்றும் சிதிலமடையாத சிமெண்ட் பாதையை பற்றி வியப்போடு பகிர்ந்து கொண்டார். எத்தனை பேருக்கு முதலில் இந்த செய்தியே தெரியும் ? போறதெல்லாம் அப்புறம் போய்க்கிடலாம் .

வரலாறுன்னா என்ன ? ராஜா மார்களின் சண்டையும் அவர்களின் ராணிகளின் எண்ணிக்கையுமா ?

கண் முன்னே இந்தத்தடயங்களை அழிய விடுவதால் வரும் தலைமுறையினருக்கு எவ்வளவு துரோகம் செய்கிறோம் ? இந்தியாவை இந்தியர் அல்லாதவர்கள் ஆண்டார்கள் , அதுதான் இந்திய வரலாறு என்று இன்னும் எத்தனை நாளைக்குத்தான் படிக்கப்போகிறோம் ?

விஷயம் என்னவென்றால் இதற்கான விழிப்புணர்வு பள்ளியில் இருந்து தொடங்க வேண்டும் . ஏனெனில் அவர்களில் பெரும்பாலோர் தான் புராதன ஓவியங்களின் மீது தங்களின் கலைத்திறனை காட்டுகிறார்கள் , குறி தவறாமல் சிலைகளின் மூக்கையும் காதையும் கல்லால் அடிக்கிறார்கள். அந்த வயது அப்படிப்பட்ட சாகசங்களை விரும்பும் . பிறகு யார் தான் அவர்களுக்கு ஹீரோவாக வாய்ப்பு தருவார்கள் . அவர்களை ஆற்றுப்படுத்த வேண்டும் .

கல்லூரியில் எனக்கு ” Engineering Ethics  ( பொறியியல் நன்னெறி என்று வைத்துக்கொள்ளுங்களேன் ) எடுத்த விவேகானந்தன் சார் , மிகவும் சிரத்தை எடுத்துக்கொண்டார். ” ஒரு BBA  முடித்து விட்டு MBA படித்த மேலாளர் லாபத்தைத்தான் பிரதானமாக நினைப்பார். ஆனால் ஒரு எஞ்சினியர் அப்படி இருக்கக்கூடாது , லாபத்தை விட Safety முக்கியம் . Safety  என்பது தனிமனிதரின் , அவர் கூட வேலை பார்ப்பவர்களின் , கடைசியாக இயந்திரங்களின் Safety ” என்றார்.  இதைப்பற்றி இன்னொரு நாள் விரிவாக சொல்கிறேன்.

இப்போது அவர் சொன்ன இன்னொரு விஷயம் நினைவுக்கு வருகிறது. ” தனி மனிதர்கள் அவர்களின் சொந்த வாழ்க்கைத்தரத்தின் மீது காட்டும் அக்கறை தான் அவர்களை சமூகத்தின் மீதும் அக்கறை கொள்ளச்செய்கிறது ” என்றார். ஒரு நல்ல விலை உயர்ந்த கார் வைத்திருப்பவன் தான் Traffic விதிமுறைகளை சரியாகப் பின்பற்றுவான் . எதிலாவது போய் இடிச்சா அவனுக்குத் தான் இழப்பு அதிகம். செகண்ட் ஹான்டில வாங்கின டூவீலரை , மண்ணெண்ணெய் ஊத்தி ஓட்றவன் எந்த விதியை மதிப்பான் ?

நம்மிடம் உள்ளவை மதிப்பு வாய்ந்தவை என்பதை முதலில் மக்களுக்குப் புரிய வைக்கவேண்டும். சரித்திர மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் பற்றி போதிப்பதோடு , அந்த இடங்கள் சுற்றுலாத்தலங்களாக  மாறினால் ஏற்படும் வாழ்க்கைத்தர உயர்வு பற்றிய நம்பிக்கையையும் பெருமிதத்தையும் வளர்த்தல்  , பழம் பொருட்களின் , ஓவியங்களின்  விலையுயர்ந்த
மதிப்பு பற்றிய அறிவை ஏற்படுத்துதல் எனப் பல தளங்களில் நாம் செயல்பட்டாக வேண்டும். மாணவர்களில் இருந்து அதை ஆரம்பிப்பது சாலச்சிறந்தது.

அந்த வகையில் தமிழாசிரியர் அவர்களின் பணி பாராட்டுதலுக்குரியது .

 1. April 5, 2012 at 6:20 PM

  கழுகுமலையிலும் , முருகன் கோயிலின் நுழைவுப் பாதையில் தெப்பத்திற்கருகில் உள்ள மண்டபக் கூரையில் இருந்த அக்காலத்து ஓவியங்கள் இன்று ஒன்று கூட இல்லை. அதில் பயன்படுத்தப்பட்டிருந்த தனித்துவமான இயற்கை வண்ணங்கள் இன்றும் என் நினைவில் உள்ளன. மதுரை மீனாட்சி கோயில் ஓவியங்களே அழிக்கப்பட்டுவிட்ட நிலையில் நம்ம ஊர் நிலை சொல்ல வேண்டியதில்லை. அரண்மனை என அழைக்கப்படும் முருகன் கோயில் தெருவில் உள்ள அந்தக் கட்டிடத்தில் மிச்சமுள்ள சில மரபான ஓவியத்தையாவது காப்பற்ற வேண்டும். யாரிடம் சொல்வதெனத் தெரியவில்லை.

 2. April 5, 2012 at 11:37 PM

  ரஞ்சித் , எனக்கும் தெரியவில்லை . காப்பாற்றப்போகிறேன் என்று சொல்லி யாராவது அதன் மீது வண்ணம் பூசிவிடும் அபாயமும் உண்டு. திருவையாறு கோவில் ஓவியங்களுக்கு ஏற்பட்ட கதி கலவரமூட்டுகிறது . என்னைப்பொறுத்த வரை ரஞ்சித் மற்றும் அசின் சாரின் தூரிகையோ , கேமராவோ இப்போதைக்கு அவற்றை பதிவு செய்து நிரந்தரமாக்கலாம். பின்னாளில் வருபவர்க்கு இங்கு ஓவியங்கள் இருந்தன என்ற செய்தியாவது மிஞ்சும் . ஊருக்கு வரும் போது கோவில் ஆட்களிடம் பேசலாம் என்று இருக்கிறேன் .

 3. April 7, 2012 at 6:33 PM

  அந்த ஓவியங்களை ஏற்கனவே நான் புகைப்படம் எடுத்து வைத்துள்ளேன். கிட்டத்தட்ட அதற்கான அழிவும் தொடங்கிவிட்டது.
  -ரஞ்சித்

 4. April 13, 2012 at 7:05 PM

  சட்டம், உன்னுடைய பதிலுரையில் இருந்த ஆதங்கமும், பொறுப்பும், அக்கறையும் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.உன்னுடைய விவேகானந்தன் சார் கூறிய Safety , எல்லா விசயத்துக்கும் பொருந்தும் என்றுதான் நினைக்கிறேன். நல்லது செயதலாற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின் என்று நரிவெரூஉத் தலையார் புறத்தில் Safety பற்றி கூறுவதிலிருந்து அன்றே அல்லவை தொல்லையாய் இருந்தது தெரிகிறது. எப்பேர்ப்பட்ட நல்ல பள்ளிக்கூடத்தில் படித்தாலும், நல்ல ஆசிரியர் படிப்பித்தாலும் – பள்ளி வளாகத்திலேயே பொருட்களை சேதப்படுத்துவது, சுவற்றில் கிறுக்குவது, பொதுக் கழிவறைகளில் ஆபாசமாக எழுதுவது இவை எல்லாம் காலம் காலமாக இருந்துவருவதுதான். இவைகளுக்கு மத்தியில் நல்லவற்றைத் தேடிப்படிப்பதும், அழகுணர்ச்சியுடன் ரசிப்பதும், பார்த்தது,கேட்டது, படித்ததைப் பகிர்வதும்தான் நல்ல வளர்ச்சியாக நினைக்கிறேன். அதை உங்கள் இருவரிடமும் நான் எப்போதும் காண்கிறேன். தனுஷின் பாடலை நாடே புகழாரம் பேசியபோதும், அதைப்பற்றி நாம் ஒரு நாள்கூட விவாதித்ததில்லை. இதுவே நம் அணுகுமுறையில் உள்ள நல்ல போக்கு என்று நினைக்கிறேன்.
  மேலும், அந்தப் பக்கத்தை அப்படியே தினமலர் செய்தித் தாளுக்கு ரிப்போர்ட்டர்
  வழியாக அனுப்பி உள்ளேன். எறியிற கல்ல எறிஞ்சி வைப்போம். எங்க விழுதோ விழட்டும்.

 5. April 13, 2012 at 11:08 PM

  நன்றி சார்.

  நீங்கள் தான் ஒரு பொழுதுபோக்கு சுற்றுலாவை , அறிவுப்பூர்வமான தகவல்களை கையேடாகவே அச்சடித்துக்கொடுத்து தவிர்க்க இயலாத தேடலாக மாற்றினீர்கள். உங்களின் வழியில் நாங்களும் .

  கொலைவெறி பாடல் ?!! இன்னொரு ஆறு மாசம் கழிச்சும் யாராவது அதைக்கேட்டால், பேசலாம்.

 1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

சித்திரவீதிக்காரன்

மதுரைக்கும் தமிழுக்கும் நேர்ந்துவிடப்பட்டவர்களுள் ஒருவன்

வண்ணதாசன்

வண்ணதாசன் எனும் கல்யாண்ஜி, புதிதாக எழுத வருபவர்கள்..வண்ணதாசனை படிக்க வேண்டும்.. (சுஜாதா)

நாஞ்சில்நாடன்

நாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.

சொல் புதிது!

கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவட்டும்!

மனம் போன போக்கில்

N. Chokkan (என். சொக்கன்)

%d bloggers like this: