Archive

Archive for September, 2012

தமிழில் Photography

கொஞ்ச நாளா கேமிரா வாங்கனும்னு ஒரு எண்ணம் . நம்ம Level க்குத் தகுந்த மாதிரி Compact கேமிரா தான் என்றாலும் , சம்பந்தப் பட்டவர்களிடம் விசாரித்தது போக , இணையத்தில் தேடிய போது இந்த அற்புதமான தளம் கிடைத்தது .

தமிழில் இது ஒரு வரம் தான் . கொஞ்சம் நேரம் ஒதுக்கி இவர்களின் 2007 – 2008 வருட பதிவுகளைப் பார்த்தால் , Professional களுக்கே நிறைய ஐடியா கிடைக்கும் . 

 
Advertisements

ஒரிசா – 3 – புவனேஸ்வரில்

புவனேஸ்வரில் பார்க்க வேண்டிய இடங்களை கூகிளிட்டாலே வண்டி வண்டியாகக் கிடைக்கும் .  நான் சொல்ல விரும்புவது கொஞ்சம் வித்தியாசமான அனுபவங்களையும் நான் செய்த தவறுகளையும்.

புவனேஷ்வரை நீங்கள் ஒரிசா அரசு சுற்றுலாத்துறையின் ” Conducted Tour ” மூலமாகவே சுற்றுவது நல்லது . ( பெரும் பணக்காரர்களை விட்டு விடலாம் , அவர்கள் இந்த பிளாக்கை படிக்கப் போவதில்லை ) .

காரணம் உண்டு , புவனேஸ்வரின் தவற விடக் கூடாத இடங்கள் என்று பார்த்தால் , அவை நகரத்தின் நாலா பக்கமும் கிடக்கும் . நந்தன் கானன் Zoo வும் கந்தகிரிக் குன்றுகளும் ஒருபுறம் , லிங்கராஜ் கோவில் ஊருக்கு உள்ளே , ராஜா ராணி கோவில் பூரி போகும் வழியில் , Dhauli குன்றுகள் ஊரை விட்டு தூரத்தில் பூரி போகும் சாலையில் இருந்து 3 1/2 கிலோமீட்டர் உள்ளே . நீங்கள் தனியாகவோ அல்லது பட்ஜெட் டூர் ஆகவோ பயணம் மேற்கொண்டால் Conducted Tour சிறந்தது. ஒரு கைடும் கிடைப்பார் .

ஒரிய அரசின் சுற்றுலாத் துறை அலுவலகம் , ” பந்தா நிவாஸ் ” ( விருந்தினர் விடுதி ) வளாகத்திலேயே உள்ளது. நான் எப்படி ஏமாந்தேன் என்று சொல்கிறேன். நான் போனது ITI களில் ஆளெடுக்க , அவை வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே . அதனால் சனி ஞாயிறு இரண்டு நாளும் சுற்றலாமே என்று திட்டமிட்டு , வியாழக்கிழமையே   பந்தா நிவாஸ் அலுவலகத்திற்கு போன் பண்ணி சனிக் கிழமை டூர் பேகேஜில் பதிவு செய்தேன் .  ஞாயிற்றுக் கிழமை எல்லா இடங்களிலும் கூட்டமாக இருக்கும் , அதனால சும்மா லோகலில் சுற்றி விட்டு சாப்ட்டுட்டு தூங்கலாம் என்று பிளான். போனை எடுத்தவரும் என் பெயர் , விவரங்கள் கேட்டு விட்டு காலையில எட்டரை மணிக்கிட்ட வந்திருங்க என்றார் .

சனிக் கிழமை போனால் , ” உங்க பேரே இல்லையே , யார்ட்ட சொன்னீங்க ” என்றார்கள் . எனக்கு பேசியவரின் பெயர் தெரியாது . வாதாடிப் பார்த்து விட்டு , கடைசியில் ஒரு சீட் கூட இல்லையா ? என்று கெஞ்சும் நிலைமைக்கு வந்து விட்டேன் . இல்லவே இல்லை என்று கூறி விட்டார்கள். அடுத்த நாளும் Full . அதற்கடுத்த சனிக்கிழமைக்குப் பதிவு செய்துவிட்டு ( மறக்காமல் அந்த ஆளின் பெயரையும் தெரிந்துகொண்டு ) , வெறுத்துப் போய் வெளியே இருந்த மியுசியத்தைப் போய் பார்த்து விட்டு ரூமுக்குப் போய் தூங்கி எந்திரிச்சி , மத்தியானம் Dhauli க்குப் போக முடிவு செய்தேன்.

Categories: பயணம்
சித்திரவீதிக்காரன்

மதுரைக்கும் தமிழுக்கும் நேர்ந்துவிடப்பட்டவர்களுள் ஒருவன்

வண்ணதாசன்

வண்ணதாசன் எனும் கல்யாண்ஜி, புதிதாக எழுத வருபவர்கள்..வண்ணதாசனை படிக்க வேண்டும்.. (சுஜாதா)

நாஞ்சில்நாடன்

நாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.

சொல் புதிது!

கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவட்டும்!

மனம் போன போக்கில்

N. Chokkan (என். சொக்கன்)