Archive

Author Archive

விரைவில்

ரொம்ப நாள் ஆகி விட்டது.

வரிசையாக இல்லாவிட்டாலும் கொஞ்சம் Random பதிவுகளில் எழுதலாம் என்று இருக்கிறேன் .

Advertisements

தமிழில் Photography

கொஞ்ச நாளா கேமிரா வாங்கனும்னு ஒரு எண்ணம் . நம்ம Level க்குத் தகுந்த மாதிரி Compact கேமிரா தான் என்றாலும் , சம்பந்தப் பட்டவர்களிடம் விசாரித்தது போக , இணையத்தில் தேடிய போது இந்த அற்புதமான தளம் கிடைத்தது .

தமிழில் இது ஒரு வரம் தான் . கொஞ்சம் நேரம் ஒதுக்கி இவர்களின் 2007 – 2008 வருட பதிவுகளைப் பார்த்தால் , Professional களுக்கே நிறைய ஐடியா கிடைக்கும் . 

 

ஒரிசா – 3 – புவனேஸ்வரில்

புவனேஸ்வரில் பார்க்க வேண்டிய இடங்களை கூகிளிட்டாலே வண்டி வண்டியாகக் கிடைக்கும் .  நான் சொல்ல விரும்புவது கொஞ்சம் வித்தியாசமான அனுபவங்களையும் நான் செய்த தவறுகளையும்.

புவனேஷ்வரை நீங்கள் ஒரிசா அரசு சுற்றுலாத்துறையின் ” Conducted Tour ” மூலமாகவே சுற்றுவது நல்லது . ( பெரும் பணக்காரர்களை விட்டு விடலாம் , அவர்கள் இந்த பிளாக்கை படிக்கப் போவதில்லை ) .

காரணம் உண்டு , புவனேஸ்வரின் தவற விடக் கூடாத இடங்கள் என்று பார்த்தால் , அவை நகரத்தின் நாலா பக்கமும் கிடக்கும் . நந்தன் கானன் Zoo வும் கந்தகிரிக் குன்றுகளும் ஒருபுறம் , லிங்கராஜ் கோவில் ஊருக்கு உள்ளே , ராஜா ராணி கோவில் பூரி போகும் வழியில் , Dhauli குன்றுகள் ஊரை விட்டு தூரத்தில் பூரி போகும் சாலையில் இருந்து 3 1/2 கிலோமீட்டர் உள்ளே . நீங்கள் தனியாகவோ அல்லது பட்ஜெட் டூர் ஆகவோ பயணம் மேற்கொண்டால் Conducted Tour சிறந்தது. ஒரு கைடும் கிடைப்பார் .

ஒரிய அரசின் சுற்றுலாத் துறை அலுவலகம் , ” பந்தா நிவாஸ் ” ( விருந்தினர் விடுதி ) வளாகத்திலேயே உள்ளது. நான் எப்படி ஏமாந்தேன் என்று சொல்கிறேன். நான் போனது ITI களில் ஆளெடுக்க , அவை வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே . அதனால் சனி ஞாயிறு இரண்டு நாளும் சுற்றலாமே என்று திட்டமிட்டு , வியாழக்கிழமையே   பந்தா நிவாஸ் அலுவலகத்திற்கு போன் பண்ணி சனிக் கிழமை டூர் பேகேஜில் பதிவு செய்தேன் .  ஞாயிற்றுக் கிழமை எல்லா இடங்களிலும் கூட்டமாக இருக்கும் , அதனால சும்மா லோகலில் சுற்றி விட்டு சாப்ட்டுட்டு தூங்கலாம் என்று பிளான். போனை எடுத்தவரும் என் பெயர் , விவரங்கள் கேட்டு விட்டு காலையில எட்டரை மணிக்கிட்ட வந்திருங்க என்றார் .

சனிக் கிழமை போனால் , ” உங்க பேரே இல்லையே , யார்ட்ட சொன்னீங்க ” என்றார்கள் . எனக்கு பேசியவரின் பெயர் தெரியாது . வாதாடிப் பார்த்து விட்டு , கடைசியில் ஒரு சீட் கூட இல்லையா ? என்று கெஞ்சும் நிலைமைக்கு வந்து விட்டேன் . இல்லவே இல்லை என்று கூறி விட்டார்கள். அடுத்த நாளும் Full . அதற்கடுத்த சனிக்கிழமைக்குப் பதிவு செய்துவிட்டு ( மறக்காமல் அந்த ஆளின் பெயரையும் தெரிந்துகொண்டு ) , வெறுத்துப் போய் வெளியே இருந்த மியுசியத்தைப் போய் பார்த்து விட்டு ரூமுக்குப் போய் தூங்கி எந்திரிச்சி , மத்தியானம் Dhauli க்குப் போக முடிவு செய்தேன்.

Categories: பயணம்

பெருந்தலைவர்

பெருந்தலைவர் காமராஜரின் 106-வது பிறந்த நாள்  (ஜூலை 15-ம் தேதி) கல்வி வளர்ச்சி நாளாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி நிலையங்களில் கொண்டாடப்பட்டது .

கர்மவீரர் காமராஜர் அவர்களைப் பற்றிய அரிய பல தகவல்களையும் , புகைப்படங்களையும் கொண்ட இந்த இரண்டு இணைய தளங்களை அனைவரும் காண வேண்டும் என்று விரும்புகிறேன் .
http://kamarajar.blogspot.in/

http://kamaraj101.blogspot.in/

ஒரிசா – பயண நினைவுகள் – 2

அப்போது என்னிடம் கேமிரா இல்லை . அதனால் படங்களை ஏற்ற வாய்ப்பில்லை . ஆனாலும் கோனார்க்கில் எடுத்த சில புகைப்படங்களின் பிரிண்டுகள் உள்ளன ,  ஸ்கேன் செய்து வலை ஏற்றுகிறேன்.

 
புவனேஸ்வர் ஒரிசாவின் தலை நகரம். எப்படி கும்பகோணத்தை தமிழகத்தின் கோவில் நகரம் என்கிறோமோ , அதே போல இந்தியாவின் கோவில் நகரம் புவனேஸ்வர் . ஹோட்டல் கனிஷ்க் என்ற சின்ன ஹோட்டலில் தங்கினோம் . ரயில்வே ஸ்டேசன் நடந்து போகும் தூரத்தில் தான். புவனேஸ்வரில் நல்ல தென்னக உணவு வேண்டுவோர் வீனஸ் ஹோட்டலில் தங்கலாம்.  

ஸ்டேசனுக்கு எதிரே உள்ள மாஸ்டர் கான்டீன் சவுக்கில்  இருந்து இடது பக்கம் பிரிந்தால் கொஞ்ச தூரத்தில் ராஜ் மஹால் சவுக் வரும் .  ராஜ் மஹால் சவுக்கில் இருந்து வலது பக்கம் திரும்பி நடந்தால் ” வீனஸ் இன் ” தெரு ,  ரோட்டை கடந்தால் வரும் . அதிக விவரங்களுக்கு கூகிள் மேப்பை பார்க்கவும். ( சவுக் என்றால் நாற்சந்தி , மோர் என்றால் முச்சந்தி அல்லது விலக்கு என்பார்கள் ).  

தெருவின் ஆரம்பத்திலேயே ஒரு ஹோட்டல் வரும் , அது பேரும் வீனஸ் தான் என்று நினைக்கிறேன் , அங்கேயும் உணவுகள் நன்றாகவே இருக்கும். கொஞ்சம் தூரத்தில் தங்கும் வசதிகளோடு பெரிய வீனஸ் இன் ஹோட்டல் இருக்கும் . கொஞ்சம் காஸ்ட்லி தான் என்றாலும் ஏமாற்றம் இருக்காது. எதுக்கு இவ்வளவு விலாவரி என்றால் , முதன்முதலில் நாங்கள் தான் ரொம்ப கஷ்டப்போட்டோம் . இனிமேல் போகிறவர்கள் சிரமப்படவேண்டாமே என்றுதான்.

புவனேஸ்வர் , பூரி , கோனார்க் இந்த மூன்று இடங்களையும் நன்றாக சுற்றிப்பார்க்க நான்கு , ஐந்து நாட்கள் வேண்டும் . புவனேஸ்வர் மட்டுமே ஒருவாரத்திற்கு உங்களை நகரவிடாது என்றாலும் , இப்போதைய சூழலில் நீங்கள் நிறைய இடங்களை கவர் செய்ய நினைத்தால் குறைந்தது ஒருவாரமாவது மேலே சொன்ன மூன்று இடங்களுக்கு ஒதுக்குங்கள்.  

ஒரிசா – பயண நினைவுகள் – 1

இவ்வளவு நாள் எதையும் எழுதாமல் இருந்ததற்கு அநியாய சோம்பேறித்தனம் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை. நம்ம என்ன நினைக்கிறோமோ அது அப்படியே ஸ்க்ரீனில் டைப் ஆகிவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் ?! .

சும்மா அலைதலும் அலைதல் சார் வாழ்க்கையும் என்று கேப்ஷன் போட்டுவிட்டு ஒரு பயணம் பற்றியும் எழுதியது கிடையாது . அதனால் நான் ஏற்கனவே போன இடங்களைப் பற்றி எழுதப்போகிறேன் . இரண்டு ஆண்டுகளுக்குப் பின் எனக்கு அந்தப் பயணத்தில் என்ன ஞாபகம் இருக்கிறது என்பதை நானே தெரிந்து கொள்ளும் முயற்சி தான் இது . பார்ப்போமே ?

பள்ளி நாட்களில் என் அப்பா என்னை எந்த டூருக்கும் அனுப்ப மாட்டார் . பசங்க கஞ்சப்பய என்று கேலி பேசினாலும் கேட்காத மாதிரி இருந்துகொள்வேன். உண்மையில் எங்கப்பா பணம் காரணமாக அல்ல , தனியாக அனுப்ப பயந்து தான் எங்களை விடவில்லை . சேர்த்து வைத்து இப்போது சுற்றிக் கொண்டிருக்கிறேன் . வேலையே சுற்றுவதுதான் .

சிதார் வெசல்சில் வேலைக்கு சேர்ந்த இரண்டாவது மாதமே என்னை ஒரிசாவிற்கு அனுப்பினார்கள் . எவ்வளவு சந்தோசமாக அந்த செய்தியை நீதி மாணிக்கம் சாரிடம் , கம்பனிக்கு எதிரே உள்ள பேக்கரியின் முன்னே இருந்த ஒரு ரூபாய் காயின் பூத்தில் இருந்து போன் செய்து சொன்னேன் என்று நினைவிருக்கிறது . ” ரொம்ப சந்தோசம் , ஒரிசா மக்கள் ரொம்ப அன்பானவங்க , நல்லா பார்த்துட்டு வா ” என்று நம்பிக்கை ஊட்டினார் . அப்போது மொபைல் வாங்கியிருக்கவில்லை . டூர் கிளம்புவதற்கு முந்திய நாள் தான்  வாங்கினேன் . Nokia 1100i  , இப்போது அப்பா வைத்திருக்கிறார்.

வேலை என்ன ? வெல்டர்,  பிட்டர்  வேலைக்கு ஐ டி ஐ முடித்த பையன்களை நேர்முகத்தேர்வு நடத்தி , திருச்சிக்கு கூட்டி வருவது .

நான் , HR பிரிவில் இருந்து மகபூப் பாஷா , பரூக் , காண்டிராக்ட் மேனஜ்மேண்டில் இருந்து பெலிக்ஸ்  என்று நான்கு பேர் , திருச்சி ஹவுரா எக்ஸ்பிரசில் ஏறினோம் . புவனேஸ்வரில் இறங்க வேண்டும்.
 

 

ரயில் பயணங்களில்

ரயில் பயணங்களைத் திட்டமிட நான் மூன்று வெப்சைட்டுகளை பயன்படுத்துகிறேன் ,

www.irctc.co.in

www.erail.in

www.indianrail.gov.in

 ஒவ்வொன்றும் தனித்துவமானவை அதேசமயம் எல்லாவிவரங்களையும் தராதவை .

சில நேரங்களில் ரயில் பயணங்களில் சில வசதிகளை மனம் எதிர்பார்க்கும் .

1 . நான் மொட்டையாக சென்னை to  மும்பை , வருகிற திங்கட்கிழமை என்று மட்டும் கொடுத்தால் எனக்கு ரயில்களின் பட்டியல் வர வேண்டும்.

2 . ஒரே ரயில் இல்லையென்றால் இணைப்பு ரயில் பற்றிய விவரம் வேண்டும் . அது என்னுடைய முதல் ரயிலின் நேரத்திற்கு ஒத்து வர வேண்டும்.

3 . ரயிலில் போய் விமானம் பிடிக்க , அல்லது விமானத்தில் போய் ரயிலைப் பிடிக்க ஒரே பக்கத்தில் விவரம் வேண்டும்.

மேலே சொன்ன எல்லா விவரங்களும் இந்த வெப்சைட் இல் கிடைக்கின்றன.

இதை வைத்து திட்டமிட்டு , பின்னர் சம்பந்தப்பட்ட இணைய தளத்திற்கு போய் முன்பதிவு செய்து கொள்ளலாம் .

சித்திரவீதிக்காரன்

மதுரைக்கும் தமிழுக்கும் நேர்ந்துவிடப்பட்டவர்களுள் ஒருவன்

வண்ணதாசன்

வண்ணதாசன் எனும் கல்யாண்ஜி, புதிதாக எழுத வருபவர்கள்..வண்ணதாசனை படிக்க வேண்டும்.. (சுஜாதா)

நாஞ்சில்நாடன்

நாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.

சொல் புதிது!

கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவட்டும்!

மனம் போன போக்கில்

N. Chokkan (என். சொக்கன்)